பாலிடெக்னிக் தேர்வு: அரியர் கட்டணம் செலுத்த மேலும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பாலிடெக்னிக் தேர்வுக்கு அரியர் கட்டணம் செலுத்தமாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மறுமதிப்பீட்டு முடிவு தாமதம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த தேவதுரை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நான் புதுக்கோட்டையில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டிடக்கலை பிரிவில் டிப்ளமோ படித்து வருகிறேன். பருவத்தேர்வில் சில பாடங்களில் தோல்வி அடைந்ததால், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து இருந்தேன். கொரோனா ஊரடங்கின் காரணமாக, மறுமதிப்பீட்டின் முடிவுகள் தாமதமானது. மறுமதிப்பீட்டு முடிவை எதிர்பார்த்து காத்திருந்தேன். இதற்கிடையே அரியர் தேர்வு எழுத, கட்டணம் செலுத்தும் அவகாசம் முடிந்துவிட்டது. எனவே எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அரியர் தேர்வுக்கட்டணம் செலுத்தவும், தேர்வு எழுதவும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும் ஒரு வாய்ப்பு

இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “மனுதாரரின் மறுமதிப்பீட்டு விண்ணப்ப முடிவு தாமதமாக வந்துள்ளது. அதில் சில பாடங்களில் தோல்வி அடைந்ததாகவும், இதனால் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்த சென்றபோது, அவகாசம் முடிந்துவிட்டதாகவும் கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரரின் எதிர்கால நலன் கருதி அரியர் பாடங்களுக்கான, தேர்வுக்கட்டணம் செலுத்த மேலும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். மனுதாரருக்கு மட்டும் அல்ல. இவரை போன்ற மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு முறை வாய்ப்பை வழங்க வேண்டும். இந்த மாணவர்களை அரியர் தேர்வு எழுதவும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, அரியர் மாணவர்களுக்கு, தேர்வு கட்டணம் செலுத்தவும், தேர்வு எழுதவும் ஒரு வாய்ப்பு வழங்கினால், இது இதற்கு முன் கொரோனாவால் தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்பை காட்டிலும் சிறப்பானதாக இருக்கும்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment