சட்டக்கல்வியில் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு

சென்னை தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் சீர்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டு கால ஒருங்கிணைந்த இளநிலை சட்டப்படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடக்க நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டத்துறை அமைச்சர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், சட்டக்கல்வியில் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார். 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள், 5 ஆண்டு கால ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு, கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி முதல் செப்டம்பர் 4-ந் தேதி வரை நடைபெற்றது. சீர்மிகு சட்டப்பள்ளியில் 5 ஆண்டு கால ஒருங்கிணைந்த இளநிலை சட்டப்படிப்புகளில் சேர்வதற்கு 5,283 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் 4,910 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 373 பேரின் விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட 4,910 பேருக்கான கட்ஆப் மதிப்பெண்கள் விவரம் கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment