நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி: புதிய பட்டியல் வெளியீடு

தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்ட நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவில் குளறுபடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் www.nta.ac.in, www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் நேற்று மாலை வெளியாகின. இதில் மொத்தம் 7 லட்சத்து 71,500 (56.44%) பேர் மருத்துவம் படிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்கிடையே மாநிலங்களில் தேர்வெழுத விண்ணப்பித்தவர்கள், நீட் தேர்வில் கலந்துகொண்டவர்கள், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்பான புள்ளிவிவரம் வெளியிடப்பட்டது.

அதில் தெலங்கானா, திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தராகாண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலத் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் தவறான பட்டியல் நீக்கப்பட்டு, திருத்தப்பட்ட புதிய பட்டியல் வெளியாகியுள்ளது.

இதன்படி, திரிபுராவில் 3,536 பேர் தேர்வு எழுதிய நிலையில் 1,738 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தெலங்கானாவில் 50 ஆயிரத்து 392 பேர் தேர்வு எழுதிய நிலையில், 28,093 பேர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் தேர்ச்சி விகிதம் 49.15% எனச் சரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் உ.பி.யில் தேர்வெழுதிய 1.56 லட்சம் பேரில் 88 ஆயிரத்து 889 பேர் தேர்வாகி உள்ளனர். மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வு எழுதிய நிலையில் 7,321 பேர் தேர்ச்சி பெற்றவர்கள் எனத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment