சென்னை பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு

கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு முதல்முறையாக ஆன்லைனில் நடத்தப்பட்டது. கடந்த மாதம் (செப்டம்பர்) இறுதி வாரத்தில் தேர்வு நடைபெற்றது. மாணவ-மாணவிகள் தங்களுக்கான வினாத்தாள்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து விடைகளை ஏ4 பேப்பரில் எழுதி ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்.

அதன்படி, அவர்களும் தேர்வை எழுதி ஆன்லைனில் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்தனர். சில மாணவர்கள் விரைவு தபால் மற்றும் கூரியர் மூலமும் அனுப்பி வைத்தனர். இந்த தேர்வு முறையில் சில சிக்கல்கள் வந்தபோதிலும் பல்கலைக்கழகம் தேர்வை நடத்தி முடித்தது. அவர்களுடன் சேர்ந்து இறுதி செமஸ்டர் தேர்வில் ‘அரியர்’ வைத்திருந்த மாணவர்களும் தேர்வை எழுதினார்கள்.

இந்த நிலையில் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் http://www.results.unom.ac.in, http://egovernance.unom.ac.inஎன்ற இணையதளங்களில் வெளியிட்டு இருக்கிறது. மாணவ-மாணவிகள் தேர்வு முடிவுகளை இந்த இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment