ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு 9-வது முறையாக நீட்டித்து அரசு உத்தரவு

ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் பதவிக் காலத்தை 9-வது முறையாக நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமிதலைமையில் கடந்த 2017 செப். 25-ம் தேதி விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் 3 ஆண்டுகள் கடந்தும் விசாரணை முடியவில்லை . ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், ஜெயலலிதா வீட்டு பணியாளர்கள் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள் ளது. இதற்கிடையில், உச்ச நீதி மன்றத்தில் அப்போலோ மருத்து வமனை தொடர்ந்த மேல்முறை யீட்டு மனு மீதான விசாரணை தாமதம் ஆவதால், ஆணையத்தின் விசாரணை கடந்த 21 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

ஆணையத்தின் பதவிக் காலம் நேற்றுடன் (24-ம் தேதி) முடிவடைய இருந்தது. இந்நிலையில், பதவிக் காலத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் ஏற்கெனவே 8 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 9-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment