பொறியியல் கலந்தாய்வில் 89,000 இடங்கள் காலி

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 89 ஆயிரம் இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1 லட்சத்து 63,154 இடங்கள் உள்ளன. 

இதில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த அக்.1-ம் தேதி தொடங்கி இணையவழியில் நடந்து வருகிறது. அதன்படி, அக்.1 முதல் 6-ம் தேதி வரை நடந்த சிறப்பு பிரிவு கலந்தாய்வில் 497 இடங்கள் நிரம்பின. இதையடுத்து, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அக்.8-ல் தொடங்கியது. இதன் முதல் சுற்றில் 7,510 இடங்கள், 2-வது சுற்றில் 13,415 இடங்கள் நிரம்பின. இதையடுத்து, 3-ம் சுற்று கலந்தாய்வு அக்.16-ல் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. க

லந்தாய்வில் பங்கேற்க மொத்தம் 35,133 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 20,999 மாணவர்கள் மட்டுமே இடங்களை உறுதிசெய்துள்ளனர். 3 சுற்று கலந்தாய்வு முடிவில் இதுவரை 43,367 இடங்களே நிரம்பியுள்ளன. இதைத் தொடர்ந்து, 4-வது சுற்று கலந்தாய்வு அக்.28-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் பங்கேற்க 40,573 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால், நடப்பு ஆண்டில் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகும் சூழல் நிலவுவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர். - கடந்த 2019 மாணவர் சேர்க்கையின்போது, 479 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 72,940 இடங்கள் இருந்தன. கலந்தாய்வு முடிவில் 83,396 இடங்கள் நிரம்பின. 89,544 இடங்கள் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment