தனி நபர் வருமானவரி தாக்கல் செய்ய டிச. 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

தனி நபர் மாதாந்திர சம்பளதாரர்கள் வருமானவரி படிவம் (ரிட்டர்ன்) தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய நிதி அமைச்சகம் நீட்டித்துள்ளது. 2019-20-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு மற்றும் அதைத்தொடர்ந்த நடவடிக்கைகள்காரண மாக தற்போது படிவம் தாக்கல் செய்வதற் கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமானவரி சட்டப் பிரிவு 1961-ன்படி 2020 ஜூலை 31-க்குள் வருமானவரி தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் ஊரடங்கு காரணமாக இது நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது டிசம் பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள தாக நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. தணிக்கை செய்யப்பட வேண்டிய வருமானவரி கணக்குகளைக் கொண் டுள்ள தனி நபர்கள் மற்றும் அவர்களது பங்குதாரர்கள் ஆகியோருக்கான கால அவகாசம் அக்டோபர் 31-ம் தேதியாக இருந்தது. தற்போது இது 2021 ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சர்வதேச நிதி பரிவர்த்தனை மற்றும் உள்நாட்டு பரிவர்த்தனை தொடர் பான விவரங்களை தாக்கல் செய்வோர் இதற்குரிய விவரங்களை நவம்பர் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இப்பிரிவினருக்கும் 2021 ஜனவரி 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதேபோல், சர்வதேச அளவிலான பரிவர்த்தனை மற்றும் உள்நாட்டு பரிவர்த் தனைகளில் தணிக்கை செய்யப்பட வேண்டிய கணக்குகள் குறித்த விவரங் களை தாக்கல் செய்வதற்கான கால அவ காசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment