கிண்டி ஐடிஐ-யில் அக்.31 வரை மாணவர் சேர்க்கை

சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி வெளியிட்ட செய் திக்குறிப்பு:கிண்டி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பொறி யியல் மற்றும் பொறியியல் அல்லாத 17 தொழிற்பிரிவுகளில் 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான சேர்க்கை அக்.31 வரை நடைபெறும். இதில் சேரும் மாணவர் களுக்கு கட்டணமில்லா பயிற்சி, விலையில்லா மடிக்கணினி, மிதி வண்டி, பாடப்புத்தகம், சீருடை, உதவித்தொகை ரூ.500 என பல சலுகைகள் வழங்கப்படும். விவரங்க ளுக்கு 044-22501350, 22501982, 94990 55649, 94990 55651 எண்க ளில் அணுகலாம். கிண்டி அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையம்: 044-2250 1982, 9499055651 ஆகிய எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment