தமிழக அரசு கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களில் 3,000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க திட்டம் தேர்வாணையம் மூலம் பணியிடத்தை நிரப்ப கோரிக்கை

தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்ககத்தின்கீழ் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 7 கல்வி யியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் 3 ஆயிரத்துக் கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங் கள் காலியாக உள்ளன. அதில், மீண்டும் கவுரவ விரிவுரையாளர் களை நியமிக்க உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக அரசு கல்லூரி முதல்வர்கள் சிலர் கூறியதாவது: தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான மோகம் குறைவது மற்றும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு அரசு வேலைகளில் சேர விரும்பும் மாணவர்களால் கலை, அறிவியல் படிப்புகளுக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வருகிறது. இதனால், கலை, அறி வியல் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த 3 ஆண்டு களாக 20 சதவீதம் கூடுதல் இடங்களுக்கு அரசு அனுமதித்து வருகிறது. 

மேலும், கடந்த 3 ஆண் டுகளில் 535 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, 4 ஆண்டுகளில் 22 புதிய கல்லூரிகளும் தொடங்கப் பட்டுள்ளன. இதனால், அரசு கல் லூரிகளுக்கு ஆசிரியர் தேவையும் அதிகரித்து வருகிறது. ஏற் கெனவே, அரசு கல்லூரியில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட வில்லை . மாறாக, காலி பணியிடங் களுக்கு 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது. 

இதற்கிடையே, அரசு கல்வியியல் கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் பற்றாக் குறையை சரிசெய்ய கலை, அறி வியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள னர். இந்நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் பணியிடத்தில் மீண்டும் கவுரவ விரிவுரையாளர் களை நியமிக்க உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதற் காக, கல்லூரியில் உள்ள காலிப் பணியிடங்கள், ஆசிரியர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர் களின் விவரத்தை கல்லூரி கல்வி இயக்ககம் அவசரமாக கேட்டுள்ளது. 

ஏற்கெனவே, அரசு கல்லூரியில் தரமில்லை என பொதுவெளியில் மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர். இதனால், தங்களின் பிள்ளைகளை அரசு கல்லூரியில் சேர்க்க தயங்கி வருகின்றனர். கவுரவ விரிவுரையா ளர்கள் அனைவரும் முறையாக பாடம் எடுக்க மாட்டார்கள் என்று நாங்கள் கூறவில்லை . ஆனால், அரசு கல்லூரியில் பணிபுரியும் ஒரு உதவி பேராசிரியர் குறைந்தது ரூ.50 ஆயிரத்துக்குமேல் சம்பளம் வாங்குகிறார். ரூ.15 ஆயிரம் சம்ப ளம் வாங்கிக் கொண்டு, அவரது பணியை செய்யும் கவுரவ விரி வுரையாளர்கள், வேண்டாவெறுப் பாக பாடம் நடத்த தொடங்கி விடுகிறார்கள். எனவே, மீண்டும் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கும் எண்ணத்தை கைவிட்டு, காலிப் பணியிடங்களை தேர்வாணையம் மூலம் நிரப்ப அரசு முன்வர வேண்டும். அதில், கவுரவவிரிவுரை யாளர்களுக்கு உரிய சலுகை மதிப்பெண்ணை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment