செவ்வாப்பேட்டை பாலிடெக்னிக்கில் சேர அக். 30 வரை விண்ணப்பம்

செவ்வாப்பேட்டை பாலிடெக்னிக்கில் சேர அக். 30 வரை விண்ணப்பிக்கலாம் திருவள்ளூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: செவ்வாப்பேட்டையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், தகவல் தொடர்பியல், கணினிப் பொறியியல் ஆகிய 5 பாடப் பிரிவுகளில் பட்டய வகுப்புகள் நடைபெறுகின்றன. தற்போது, முதலாண்டு மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக நடைபெற்றுள்ள நிலையில், தற்போது மேலும் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் காலியாக உள்ள சில இடங்களில் சேர விரும்பும் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்லூரியில் விண்ணப்ப படிவங்களை பெறலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. இதரப் பிரிவினருக்கு விண்ணப்ப கட்ட ணம் ரூ.150, பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை அக்.30-க்குள் கல்லூரி முதல்வரிடம் சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment