TNEA RANK LIST 2020 : பொறியியல் தரவரிசை பட்டியலை வெளியிடுவதில் மேலும் தாமதம்

தமிழகத்தில் நடப்பு ஆண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு அக்டோபரில் தொடங்கவுள்ளது. இதில் 458 கல்லூரிகளில் உள்ள 1,61,877 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்நிலையில் மாணவர் களுக்கான ரேண்டம் எண் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து தரவரிசைப் பட்டியலை செப். 17-ல் வெளியிட திட்டமிட்டு, பின்பு செப்.25-ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித் தது. ஆனால், தரவரிசை பட்டி யல் தொடர்பான எவ்வித தக வல்களையும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நேற்று வெளியிடாததால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘தொழில் நுட்பக் கோளாறு காரணமாக தரவரி சைப் பட்டியல் வெளியீடு 3-வது முறையாக தள்ளிவைக்கப் பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் கோளாறை சரி செய்து பட்டி யலை வெளியிட திட்டமிட்டுள் ளோம்’’ என்றனர்.

No comments:

Post a Comment