TNEA RANK 2020 : மாணவர்கள் தரவரிசை பட்டியல் வெளியீடு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்.

பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ளவுள்ள மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் அன் பழகன் நேற்று வெளியிட்டார். கலந் தாய்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டன.

மொத்தம் 1 லட்சத்து 12,406 பேர் அடங்கிய தரவரிசை பட்டியலில், முதல் 10 இடங்களில் மாணவிகளை விட மாணவர்களே அதிகமாக 7 இடத்தை பிடித்துள்ளனர். அதன்படி, முதல் 10-ல், சஸ்மிதா (கோவை) மற்றும் நவநீத கிருஷ்ணன் (திருவண்ணாமலை) ஆகியோர் 199.67 மதிப்பெண் பெற் றுள்ளனர். காவ்யா (நீலகிரி), ஆதித்யா (சென்னை), பிரவிண் குமார் (திருவண்ணாமலை) ஆகியோர் 199.5 கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். அதேபோல், நந்தினி (அரக்கோணம்), லோகித் வேல் கோபி கண்ணன் (தேனி), சுதீப் (பொள்ளாச்சி) ஆகி யோர் 199.33-ம், ஷியா கிரேஸ் (கன்னியாகுமரி), குணால் வினோத் குமார் ஷிந்துஜா (மதுரை) ஆகியோர் 199 கட் ஆப் பெற்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:

பொறியியல் படிப்புக்காக 1 லட்சத்து 60 ஆயிரத்து 834 பேர் விண்ணப்பித்த தில், ஒரு லட்சத்து 15,088 பேர் சான் றிதழ் பதிவேற்றம் செய்திருந்தனர். அவர்களுடைய சான்றிதழ் சரிபார்க் கப்பட்டு 1 லட்சத்து 12,406 பேர் தகுதி யுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 71,469 மாண வர்களும் 40,922 மாணவிகளும் மூன்றாம் பாலினத்தவர்கள் 15 பேரும் உள்ளனர்.

தரவரிசை பட்டியலில் ஏதும் தவறு இருந்தால் மாணவர்கள் இயக்ககத் துக்கு தெரிவிக்க 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி கள் பிரிவு (149 மாணவர்கள்), முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் (855), விளையாட்டுப்பிரிவில் (1,409) என சிறப்பு பிரிவு கலந்தாய்வு வருகிற 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெறும்.

அதனைத்தொடர்ந்து பொதுப் பிரி வினருக்கான கலந்தாய்வு 8-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 4 கட்டங் களாக நடைபெறும். ரேண்டம் எண் 791 மாணவர்களுக்கு பயன்படுத் தப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் தனியார் கல்லூரி மேலாண்மை பிரிவில் இருந்து 27,476 இடங்கள் அரசிடம் ஒப்படைக் கப்பட்டது. கடந்த ஆண்டு கலந்தாய் வில் பங்கேற்ற 27 பொறியியல் கல் லூரிகள் நடப்பாண்டில் பங்கேற்க வில்லை. அதேபோல், 8 புதிய கல் லூரிகள் கலந்தாய்வில் கலந்து கொள் ளவுள்ளன. விண்ணப்பித்தவர்களில் 2,682 விண்ணப்பங்கள் பல்வேறு கார ணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை உள்ளடக்கியதுதான் அண்ணா பல்கலைக்கழகம். பல் கலைக்கழகத்தின் வளாக கல்லூரி களுக்கு மட்டும் அந்த பெயர் சொந்த மானது இல்லை. 4 வளாக கல்லூரி களின் பேராசிரியர்கள்தான் பெயர் மாற் றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மற்ற கல்லூரிகள் எதிர்க்கவில்லை. அண்ணா பல்கலைக்கழக வளாக கல் லூரிகளில் இருப்பவர்களை ஆராய்ச்சி யில் அதிகம் ஈடுபடுத்த அரசு நல்ல முடிவை எடுத்துள்ளது. இதில் யாருக் கும் பாதிப்பு வராது. தற்போது மத்திய அரசிடம் இருந்து எந்த நிதியும் வாங் காமலும், சிறப்பு அந்தஸ்து பெறாமலும் தேவையான அனைத்தையும் மாநில அரசு தருவதற்காகதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை, 2035-ம் ஆண்டில் மொத்தப் பதிவு விகிதம் (GER) 50-51 சதவீதமாக வேண்டும் என கூறுகிறது. அப்போது நாம் 65 சதவீதம் சென்றுவிடுவோம். மேலும், புதிய கல்விக் கொள்கை குறித்து உயர்கல்வித் துறை ஆராய்ந்து அளிக்கும் தொகுப்புகள் வந்ததும் தமிழகத்துக்கு சாதகமான கருத்துகள் எடுத்துக் கொள்ளப்படும். இதற்கான அறிக்கையை உயர்கல்வித் துறை சார் பில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு இன்னும் 2 -3 நாட்களில் தாக்கல் செய்யவுள்ளது.

அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. விரைவில் முடிவுகள் வெளியிடப்படும். கல்லூரிகள் கரோனா மையங்களாக பயன்படுத்தப்படுகிறது. இவற்றை மாற்ற அரசு முடிவு எடுத்த பின்னரே கல்லூரி திறப்பு பற்றி பேசமுடியும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment