NEET ANSWER KEY 2020 : நீட் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு.

நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகளை (கீ ஆன்சர்) என்டிஏ வெளியிட்டுள்ளது.நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

அதன்படி நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் கடந்த செப்.13-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 14.37 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் (கீ ஆன்சர்) நேற்று வெளியாகின.

இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பு: நீட் தேர்வு விடைக்குறிப்பு விவரங்களை மாணவர்கள் https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். 

இவற்றில் மாணவர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருப்பின், அதை தற்போது மின்னஞ்சலில் அனுப்ப வேண்டாம். ஆட்சேபனை கருத்துகளை தெரிவிக்க அனைத்து தரப்புக்கும் பிரத்யேக வாய்ப்புகள் வழங்கப்படும். அதற்கான தேதிகள் விரைவில் வெளியாகும். கூடுதல் விவரங்களை ntaneet.nic.in, www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் அறியலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment