CIVIL SERVICE EXAM : 4-ந் தேதி நடக்கும் சிவில் சர்வீசஸ் தேர்வை தள்ளி வைக்க முடியாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வு, வருகிற 4-ந் தேதி நடக்கிறது.

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு ஆகிய காரணங்களுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வை 3 மாதங்களுக்கு தள்ளிவைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட மறுத்து விட்டது. இந்த ஆண்டு தேர்வை, அடுத்த ஆண்டு தேர்வுடன் இணைத்து நடத்துமாறு விடுத்த கோரிக்கையையும் நிராகரித்து விட்டது.

அதே சமயத்தில், இந்த ஆண்டு தங்கள் கடைசி முயற்சியாக விண்ணப்பித்தவர்கள், கொரோனா காரணமாக தேர்வு எழுதாவிட்டால், அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு அளிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

No comments:

Post a Comment