அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகி, உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2020-21 ஆம் கல்வியாண்டில், மாணவர்களைப் பொறியியல் படிப்பில் சேர்ப்பதற்காக, அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

அதில் தலைமையகமான சென்னை மற்றும் பிற மண்டலங்களான கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஐந்து மண்டலங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதில் கல்லூரியின் பெயர், அனுமதிக்கப்பட்ட மொத்த இடங்கள், பொறியியல் கவுன்சிலிங் எண் ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. கல்லூரியை க்ளிக் செய்தால், கல்லூரியின் முகவரி, ஆரம்பிக்கப்பட்ட வருடம், மாணவர் இடங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் உள்ளன.

எப்படித் தெரிந்துகொள்வது?

https://www.annauniv.edu/cai/Options.php என்ற இணைய முகவரி மூலம் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்தும் இப்பட்டியலில் இடம் பெறாமல் உள்ள சில கல்லூரிகள், ஆகஸ்ட்15-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களை அளித்தால், அவற்றைச் சரிபார்த்து அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம்  தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment