மறுதேர்வு எழுத உள்ளவர்களின் நிலை என்ன ?

பிளஸ்-2 இறுதிநாள் தேர்வை பல மாணவர்களால் எழுத முடியாமல் போனது. அவர்களுக்கு மறுதேர்வு நடத்த அரசு திட்டமிட்டு, வருகிற 27-ந் தேதி தேர்வு நடத்த உள்ளது. அவர்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டு, மொத்தமாக தேர்வு முடிவு வெளியாகும் என எதிபார்த்திருந்த நிலையில், நேற்று திடீரென்று தேர்வுமுடிவு வெளியானது.

இதனால் மறுதேர்வு எழுத இருக்கும் மாணவர்களின் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு தேர்வுத்துறை, “கடந்த 24.3.2020 அன்று வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் பாடத்தேர்வுகளை எழுத முடியாத தேர்வர்களுக்கு, தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் தேர்வு முடிவில் அவர்கள் எழுதிய பாடங்களுக்கான தேர்வு மதிப்பெண் மட்டும் குறிப்பிடப்பட்டு இருக்கும். வருகிற 27-ந் தேதி தேர்வு முடிந்தபின், தேர்வு எழுதிய அனைத்து பாடங்களுக்கும் சேர்த்து தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்“ என்று தெரிவித்து இருக்கிறது.

No comments:

Post a Comment