சுழற்சி முறை வகுப்புகள் ரத்து கல்லூரிகள் பின்பற்ற இயக்குநரகம் உத்தரவு

அரசு கல்லூரிகள், சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) கே.விவேகானந்தன், அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இருந்த சுழற்சி முறையிலான வகுப்புகளை ரத்து செய்து, ஒரே ‘ஷிப்ட்’ நடை முறையை அமல்படுத்தி உயர் கல்வித் துறை அரசாணை வெளி யிட்டது. அதன்படி காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை கல்லூரிகளில் வகுப்புகள் நடை பெறும். மதியம் 1.30 முதல் 2.30 மணி வரை உணவு இடைவேளைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், தலா ஒரு மணி நேரம் வீதம் தினமும் 6 பாடவேளைகள் நடத்தப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடப்பு கல்வி ஆண்டு முதல் இந்த அரசாணையை அனைத்து அரசு கல்லூரிகளும் தவறாமல் பின்பற்ற வேண் டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment