வழிகாட்டு நெறிகளை வெளியிட்டது மத்திய அரசு

நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள் ளது. ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித் துள்ளது.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த மே 31-ம் தேதி வரை 4 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப் பட்டது. கடந்த ஜூன் முதல் ஊரடங் கில் இருந்து வெளியேறுவதற்கான வழிகாட்டு நெறிகள் வெளியிடப் பட்டு வருகின்றன. இதன்படி 3-வது கட்டமாக ஆகஸ்ட் மாதத்துக்கான வழிகாட்டு நெறிகளை மத்திய உள் துறை அமைச்சகம் நேற்றிரவு வெளி யிட்டது. அதன் விவரம் வருமாறு:

ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் யோகா மையங்கள், உடற்பயிற்சி கூடங் கள் செயல்படலாம். எனினும், மத் திய சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

நாடு முழுவதும் சுதந்திர தின விழாக்களை நடத்தலாம். விழாவில் சமூக இடைவெளியை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும். இரவு நேர ஊரடங்கு விலக்கி கொள்ளப்படுகிறது. நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் ஊரடங்கு அமலில் இருக்கும்.

வந்தே பாரத் திட்டத்தில் குறிப்பிட்ட அளவிலான சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை இயக்கப்படும்.

பள்ளிகள், கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்கள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படாது.

திரையரங்கு, நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்கா, மதுபான பார்கள், கலையரங்கத்தை திறக்க அனுமதி இல்லை. சமூக, அரசியல், விளையாட்டு, கேளிக்கை, கல்வி, கலாச்சார, மதவழிபாட்டு கூட்டங்களை நடத்தக் கூடாது. அந்தந்த மாநில அரசுகள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்துக் கொள்ளலாம்.

மாவட்டங்கள் மற்றும் மாநிலங் களுக்கு இடையிலான மக்கள் போக்குவரத்து, சரக்கு போக்கு வரத்துக்கு எவ்வித தடையும் இல்லை. இதற்காக தனியாக இ-பாஸ் அல்லது அனுமதி பெற தேவையில்லை. எனினும் இந்த விவகாரத்தில் அந்தந்த மாநில அரசு கள் முடிவெடுக்க முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.

கடைகள் மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும். கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் வீட்டிலேயே இருப்பது நல்லது. ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு வழிகாட்டு நெறி களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment