புதிய தேசிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல்

பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக் கப்பட்டுள்ளது. இந்த புதிய கொள் கையின்படி எம்.ஃபில் படிப்புகள் நிறுத்தப்படுகின்றன. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இனி மத்திய கல்வித்துறை அமைச்சகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

21-ம் நூற்றாண்டுக்கான புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கி, அந்த அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், தற்போது பெயர் மாற்றப்பட்டு கல்வித்துறை அமைச் சகம் என அழைக்கப்படும்” என்றார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவ்டேகர், ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் கூறியதாவது:

கடந்த 2014-ல் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட போது தேசிய கல்விக் கொள்கை யில் மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் புதிய தேசிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட் டுள்ளது. 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. எனவே, தற்போது கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் மூலம் உலகளாவிய அறிவார்ந்த வல்லரசாக இந்தியா மாற்றப்படும். உயர் கல்வி வளர்ச்சிக்காக ஒற்றை ஒழுங்குமுறை ஆணையம் அமைக் கப்படும். மாநில மொழிகளில் கல்வி கற்பிக்க இணையதளம் மூலம் மாணவர்களுக்கு பாடத்திட் டங்கள் அளிக்கப்படும்.

புதிய கல்வித் கொள்கை மூலம் 3 வயது முதலே குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும். 6-ம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி பாடங்கள் அறிமுகம் செய்யப்படும்.

பன்மொழி கல்வியை ஊக்கு விக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள் ளது. மாநில மொழிகளுக்கு இணையாக புதிய கல்விக் கொள்கையில் பாட திட்டங்கள் இருக்கும்.

குழந்தைகளுக்கு எளிதான வழிமுறைகள் மூலம் ஆரம்ப கல்வி கற்பிக்கப்படும். புத்தகங் கள் மட்டுமின்றி செய்முறை, விளை யாட்டு மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படும்

மாற்றுத்திறனாளிகள் எளிதாக கல்வி கற்க புதிய மென்பொருட்கள் மூலம் வசதிகள் உருவாக்கப்படும். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வியை உறுதி செய்ய புதிய பாட திட்டம் அறிமுகம் செய்யப் படும்.

5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம் என்ற விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அடுத்த 15 ஆண்டுகளில் இணைப்புக் கல்லூரி முறையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொறியியல் போன்ற உயர் படிப்புகளில், ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பின்னர் படிப்பை மாணவ, மாணவிகள் தொடர வழிவகை செய்யப் பட்டுள்ளது.

தற்போது 8-ம் வகுப்பு வரை உள்ள இலவச கட்டாயக் கல்வி திட்டம், 12-ம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட உள்ளது. இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும்.

முதல் ஆண்டில் பழைய மற்றும் புதிய கல்விக் கொள்கை நடைமுறையில் இருக்கும். 2-ம் ஆண்டு முதல் புதிய கல்விக் கொள்கை முழுமையாக நடை முறையில் இருக்கும். 2030-ம் ஆண் டுக்குள் அனைவருக்கும் கல்வி என் பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்வித்துறைக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் அமைக்கப்படும். தற்போது அமலில் உள்ள எம்.ஃபில் படிப்புகள் நிறுத்தப்படும். கல்வி யின் வளர்ச்சிக்காக தேசிய ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப் படும்.

தற்போதுள்ள நிகர்நிலை பல்கலைக்கழகம், இணைப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் போன்ற வார்த்தைகள் நீக்கப்பட்டு பல்கலைக்கழகம் என்ற பெயர் மட்டுமே நீடிக்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

முழுமையான மற்றும் பல் துறை படிப்புகளுக்காக ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறு வனங்களுக்கு இணையாக பல் துறை மற்றும் ஆராய்ச்சி பல் கலைக் கழகங்கள் (எம்இஆர்யு) அமைக் கப்படும். இவை, மாதிரி பொது பல்கலைக்கழகங்கள் என்று அழைக்கப்படும்.

உலக கல்வி நிறுவனங்களுக்கு இணையான தரத்தில் கல்வியை அளிக்கும் வகையில் இந்திய இன்ஸ்டிடியூட்கள் மேம்படுத்தப் படும். இதன்மூலம் வெளிநாடு களில் இருந்து மாணவர்கள் நமது நாட்டை அணுகும் நிலை உருவாக்கப்படும். இதற்காக ஒவ்வொரு இன்ஸ்டிடியூட்டிலும் சர்வதேச மாணவர் அலுவலகம் உருவாக்கப்படும்.

நமது நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்கள் சார்பாக வெளிநாடு களில் கல்வி வளாகங்கள் (கேம்பஸ்) உருவாக்கப்படும். தர வரிசைப் பட்டியலில் 100 இடங் களுக்குள் உள்ள இந்திய கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் வளாகங்களை ஏற்படுத்த முடியும்.

மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருதத்தை விருப்ப பாட மாக அறிமுகம் செய்யப்படும். மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே மொழிகளை தேர்வு செய்யலாம். தங்களுக்கு தேவை இல்லாத பாடங்களை மாண வர்கள் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எந்த மொழி யையும் படிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை .

எந்த மொழியையும் மாணவர் கள் மீது திணிக்க போவது இல்லை. எந்த மொழிகளை மும்மொழி கொள்கைக்கு அனுமதிக்கலாம் என்பதை மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம். வெளிநாட்டு மொழி களையும் மாணவர்கள் படிக்க தேர்வு செய்யலாம். மாணவர் களுக்கு "சைகை-மொழி" அறி முகப்படுத்தப்படும்.

இவ்வாறு கூறினர். - பிடிஐ

No comments:

Post a Comment