கல்லூரி மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் ரத்து உயர்நிலைக் குழு பரிந்துரையை ஏற்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இறுதி ஆண்டு மாணவர்களுக்கான நிலை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவ தும் ஊரடங்கு அமல்படுத்தப்பட் டுள்ளதால் கடந்த 4 மாதங்களாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி இறுதித் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, தமி ழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஆண்டுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு ஊரடங் குக்கு முன்பே தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. பிளஸ் 1 மாணவர் கள் கடைசி ஒரு தேர்வை மட்டும் எழுதவில்லை. அதனால், அவர்களும் முழுமையாக தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல கல்லூரி, பல்கலைக் கழகங்களில் ஏப்ரல் மாதம் நடக்க விருந்த பருவத்தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டன. கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கல்லூரிகளில் 1, 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களை சூழ லின் தீவிரம் பொறுத்து முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி செய்யவும், இறுதி ஆண்டு மாணவர் களுக்கு செப்டம்பருக்குள் தேர்வு களை நடத்தவும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) உத்தரவிட்டது.

அதேநேரம் தமிழகத்தில் நோய்த் தொற்று தீவிரம் அதிகரித்து வருவதால் பருவத்தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பிலும் அரசுக்கு தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதையடுத்து பருவத் தேர்வுகள் தொடர்பாக ஆராய உயர் கல்வித் துறை செயலர் தலைமை யில் 11 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின்படி தற்போது கல்லூரிகளில் 1, 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக முதல்வர் பழனி சாமி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தற்போதைய கரோனா தொற்று பரவல் சூழலில் தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக் கும் மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டுக்கான (2019-20) பருவத் தேர்வுகளை நடத்த முடியாத நிலை இருப்பதாக தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு தனது பரிந்துரையை அளித்துள்ளது.

இதையடுத்து மாணவர்களின் நலன்கருதி, பல்கலைக்கழக மானி யக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும வழி காட்டுதலின்படி மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி கலை, அறிவியல் மற்றும் பாலி டெக்னிக் கல்லூரிகளில் 1, 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் 1, 2, 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த பருவத்தேர்வில் இருந்து மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

அதேபோல் கலை, அறிவியல் மற் றும் பொறியியல் முதுநிலை பட்டப் படிப்பில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் எம்சிஏ-வில் 1, 2-ம் ஆண்டு மாணவர்களுக்கும் பருவத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டுக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு உயர்கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பருவத்தேர்வு மற்றும் அரியர் தேர்வு குறித்த தகவல்கள் முதல்வரின் அறிவிப்பில் இடம்பெறவில்லை. இதனால், மாணவர்கள் இடையே சற்று குழப்பம் ஏற்பட்டது.

இதுகுறித்து உயர்கல்வித் துறை செயலர் அபூர்வாவிடம் கேட்டபோது, ‘‘இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பருவத்தேர்வு குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் கேட்டு மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மத்திய அர சிடம் இருந்து பதில் வந்ததும் இந்த விவகாரத்தில் முதல்வர் அறிவுறுத்த லின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

அதேநேரம் மாணவர்களின் அகமதிப்பீடு மதிப்பெண்கள் அடிப் படையிலேயே தேர்ச்சி வழங் கப்பட உள்ளதால் அரியர் தேர்வு களை ரத்து செய்ய முடியாத நிலை உள்ளது’’ என்றார்.

இறுதி ஆண்டு மாணவர்களுக்கும், அரியர் பாடத் தேர்வுகளுக்கும் தேர்வுகள் நடத்தப்படவே அதிக வாய்ப்புள்ளதாக உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment