செப்டம்பரில் கரோனா தடுப்பு மருந்து தயார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பரிசோதனைகள் வெற்றி

உலகம் முழுவதும் 150 தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட பரி சோதனைகளில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (டபிள்யுஹெச்ஓ) தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல் கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து, ஆரம்ப கட்ட சோதனைகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்த மருந்தின் செயல்பாடுகள் குறித்த விவரம் லான்செட் மருத்துவ இதழில் வெளி யாகி உள்ளது. ‘நாளைய தடுப்பு மருந்து’ என்ற தலைப்பில் ஆசிரியர் ரிச்சர்ட் ஹார்டன் வெளியிட்ட கட்டுரை வெளியாகியுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் அங்கமான மருத்துவத் துறை சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நூபீல்டு எனும் மையம், ஜென்னர் மையத்துடன் இணைந்து ஏஇஸ்டி 1222 என்ற பெயரில் கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. இதற்கான மூலக்கூறு மருந்தை பிரிட்டன்-ஸ்வீடிஷ் பார்மா நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகா பிஎல்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ஜென்னர் மையம் உருவாக்கி யுள்ள கோவிட்-19 தடுப்பு மருந்து கரோனா வைரஸ் தாக்கிவதில் இருந்து நோயாளிகளுக்கு இரட்டை பாதுகாப்பு அளிக்கக் கூடியது. இந்த தடுப்பு மருந்து உடலில் எதிர்ப்பு சக்தியை டி-செல் லில் உருவாக்கும். இதனால் உரு வாகும் செல்கள் வைரஸ் மற்றும் பல்வேறு நோய் தொற்றிலிருந்து உடலை பாதுகாக்கக் கூடிய எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். மனித உடலில் உள்ள டி-செல் களானது மனித உடலில் இருக்கும் கடைசி நேரம் வரை நோய் தாக்கு தலில் இருந்து மனிதர்களைக் காக் கும். அத்துடன் வைரஸ் வளர்வதைத் தடுக்கும். சமீபத்திய ஆய்வுகளில் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நோயாளிகளின் உடலில் உருவான எதிர்ப்பு சக்தி 3 மாதங்களுக்குப் பிறகு செயலிழந்துவிடுவது தெரிய வந்துள்ளது.

ஆஸ்ட்ரா ஜெனிகா வெளியிட் டுள்ள தகவலின்படி செப்டம்பரில் கரோனா தடுப்பு மருந்து தயாராகி விடும் என தெரிவித்துள்ளது. இத் தகவலை ஆக்ஸ்போர்டு பல்கலை மேற்கொண்டுள்ள பரிசோதனை களை செயல்படுத்தும் பெர்க் ஷயர் ஆராய்ச்சி நன்னெறி குழு தலைவர் டேவிட் கார்பென்டர் தெரி வித்துள்ளார்.

இதுதொடர்பாக டெய்லி டெலி கிராப் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது மேற்கொள் ளப்பட்டு வரும் சோதனைகள் மிகவும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

இங்கிலாந்தில் தடுப்பு மருந்து சோதனை 2-வது மற்றும் 3-வது கட்டத்தை எட்டியுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் இது 3-வது கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தடுப்பு மருந்தானது லாப நோக்கமின்றி தயாரிக்கப்படுவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் மையம் ஆஸ்ட்ரா ஜெனிகா மையத்துடன் இணைந்து இந்த தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்க உள்ளது.

No comments:

Post a Comment