நடப்பு கல்வி ஆண்டில் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகள் விவரம் அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு

நடப்பு கல்வி ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத் தின் இணைப்பு பெற்ற பொறி யியல் கல்லூரிகளின் விவரம் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பொறி யியல் கல்லூரிகளில் 2020-21-ம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் இணைய வழியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அண்ணா பல்கலை.யுடன் இணைப்பு பெற்ற கல்லூரிகளின் விவரங்கள் அண்ணா பல்கலை. இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள் ளன. சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அதில் உள்ள ஒவ் வொரு கல்லூரியின் பெயர், 2020-21-ம் ஆண்டில் அனுமதிக் கப்பட்ட இடங்கள், 2019-20-ம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட இடங் கள், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குறியீட்டு எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

மாணவர்களும் பெற்றோரும் தாங்கள் தேர்வு செய்ய உள்ள கல்லூரியின் விவரத்தை https://www.annauniv.edu/cai/Options.php என்ற இணையதளத் தின் மூலம் தெரிந்து கொள்ள லாம்.

மேலும், இப்பட்டியலில் விடு பட்டுள்ள கல்லூரிகள் ஆகஸ்ட் 15-க்குள் அண்ணா பல்கலைக் கழகத்திடம் இணைப்பு ஆவ ணங்களை சமர்ப்பித்தால், அதற்கான அங்கீகாரம் வழங்கப் பட்டு, பட்டியலில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழக பொறி யியல் கல்லூரிகளில் 2.63 லட்சம் இடங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) அனுமதி வழங்கி உள்ளது.

தமிழகத்தில் 536 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின் றன. இதில், 10 அரசுக் கல்லூரி கள், 3 அரசு உதவி பெறும் கல் லூரிகள், 503 தனியார் கல்லூரி கள், அண்ணா பல்கலைக்கழக வளாக மற்றும் உறுப்பு கல்லூரி கள் 20 உள்ளன.

நடப்பு கல்வி ஆண்டில் மாண வர் சேர்க்கை நடத்த 505 பொறி யியல் கல்லூரிகள் ஏஐசிடிஇ-யுடன் இணைப்பு அங்கீகாரத்தை புதுப்பித்துள்ளன. அதன்படி 2 லட்சத்து 63 ஆயிரத்து 184 இடங்களுக்கு ஏஐசிடிஇ அனுமதி வழங்கி உள்ளது.

மேலும் தமிழகத்தில் புதிதாக 3 பொறியியல் கல்லூரிகள் தொடங்கவும், அவற்றில் 1,080 இடங்களில் மாணவர் சேர்க்கைக் கும் அனுமதி அளிக்கப்பட்டுள் ளது. அதேபோல், நாடு முழு வதும் தொழில்நுட்ப படிப்பு, மேலாண்மை படிப்பு மற்றும் பார்மசி படிப்புகளுக்கு 30 லட் சத்து 86 ஆயிரத்து 22 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொறியியல் கல்லூரிகள் உட்பட 179 தொழிற்கல்வி நிலை யங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment