மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை 3 மாதத்தில் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) உரிய இடஒதுக்கீடு வழங்க சட்டரீதியாக எந்த தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசு களின் சுகாதாரத் துறை செய லர்கள், இந்திய மருத்துவ கவுன் சில் மற்றும் பல் மருத்துவ கவுன் சில் ஆகியோர் அடங்கிய கமிட்டி அமைத்து 3 மாதத்தில் தகுந்த முடிவு எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மருத்துவ இளநிலை பட்டப் படிப்புகளுக்காக மொத்த இடங்களில் 15 சதவீதமும், மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங் களில் 50 சதவீதமும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்பட்டு வரு கிறது. அவ்வாறு அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக வழங்கப்படும் இடங்களில் கடந்த 2017 முதல் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கான (ஓபிசி) இட ஒதுக்கீடு முற்றிலுமாக மறுக்கப்பட்டு வரு கிறது. பட்டியலினத்தவர்கள், பழங் குடியினர், மாற்றுத்திறனாளிகள் தவிர்த்து மற்ற அனைவரையும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவாக அறிவித்து மாண வர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

மாநில அரசால் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங் களில் இருந்து ஓபிசி மாண வர்களுக்கு சட்டரீதியாக கிடைக்க வேண்டிய இடஒதுக்கீட்டு உரி மையை கோருகிறோம். இதை மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் தரமறுப்பது ஏற்புடை யதல்ல என்று தமிழக அரசும் பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், மருத்துவ படிப்பு களுக்கான அகில இந்திய ஒதுக் கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு தமிழகத்தில் இருந்து வழங்கப்படும் இடங்களில், ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக சுகாதாரத் துறை சார்பிலும், அதிமுக, திமுக, பாமக, மதிமுக, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் போன்ற அரசியல் கட்சிகளும், பல்வேறு தனிநபர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக 13 மனுக்களை தாக்கல் செய்திருந் தனர். இதில், பாமக சார்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக் கப்பட்டு இருந்தது.

இந்த மனுக்கள் ஏற்கெனவே தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கர நாராயணன், தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாரா யண், அரசு ப்ளீடர் வி.ஜெயப் பிரகாஷ் நாராயணன், திமுக தரப் பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பாமக சார் பில் வழக்கறிஞர் கே.பாலு, கம் யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் வழக் கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு, இந்திய மருத்துவ கவுன்சில் தரப் பில் பி.ஆர்.ராமன் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஆர்.தியாகராஜன், வழக்கறிஞர் நன்மாறன் என பலர் ஆஜராகி வாதிட்டனர்.

‘வரலாற்றிலேயே முதன்முறை யாக மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற எந்தவொரு அரசியல் பேத மும் இல்லாமல் தமிழக அரசுடன் இணைந்து அனைத்து அரசி யல் கட்சிகளும் முழுமனதுடன் ஒருமித்த குரல் எழுப்பியுள்ளன. ஏற்கெனவே தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளதால், அதில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 50 சதவீத இடஒதுக்கீட்டை ஓபிசி இடஒதுக்கீடாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்திய மருத்துவ கவுன்சில் தரப் பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘அகில இந்திய ஒதுக்கீட் டுக்கான இடங்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே நிரப்பப்பட்டு வரு கிறது. இதில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய இடஒதுக் கீடு வழங்க உச்ச நீதிமன்றம் தான் அனுமதி அளிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அனைத்து தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தனர். 170 பக்க விரிவான தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு அல்லாத கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க சட்டரீதி யாகவோ அல்லது அரசியலமைப்பு ரீதியாகவோ எந்தவொரு தடை யும் இல்லை. மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஓபிசி பிரிவின ருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஆட்சேபம் தெரி விக்காத இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய அரசு அல்லாத கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்க முடியாது என மறுக்க முடியாது. மாநில அரசால் கடைபிடிக்கப்படும் இட ஒதுக்கீட்டு முறை, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு பொருந் தாது எனவும் கூற முடியாது.

மருத்துவ கவுன்சில் விதிகளி லும் மாநில அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றக்கூடாது என குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம்தான் அனுமதி அளிக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் வாதமும் ஏற்புடையதல்ல.

மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நீட் தேர்வின் அடிப்படையில் நடக் கும்போது, மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியையும் தீர் மானிக்க வேண்டும்.

அடுத்த கல்வி ஆண்டில்..

மனுதாரர்களின் கோரிக்கைப் படி ஓபிசி பிரிவினருக்கு எத் தனை சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியும் என்பதையும் முடிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, இதுதொடர்பாக மத்திய அரசின் குடும்பநலத் துறை அமைச்சக முதன்மை இயக்குநர் தலைமை யில் தமிழக சுகாதாரத் துறை செய லர், இந்திய மருத்துவ கவுன்சில் செயலர் மற்றும் பல் மருத்துவ கவுன்சில் செயலர் ஆகியோர் அடங் கிய கமிட்டி அமைத்து, கலந்து ஆலோசித்து, அடுத்த கல்வி ஆண் டில் ஓபிசி பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீட்டு சலுகை வழங்குவது தொடர்பாக 3 மாதத்தில் தகுந்த முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment