பிளஸ் 2 மறுதேர்வு நாளை நடக்கிறது ஏற்பாடுகள் தீவிரம்


சென்னை
பிளஸ் 2 இறுதித் தேர்வில் பங் கேற்காத மாணவர்களுக்கான மறுதேர்வு நாளை (ஜூலை 27) நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஊரடங்கு காரண மாக மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித் தேர்வில் சில மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் நாளை (ஜூலை 27) மறுதேர்வு நடைபெற உள்ளது. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

மாணவர்கள் படிக்கும் பள்ளி களிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர தேவையுள்ள மாணவர்களுக்கு மட்டும் தேர்வு மையத்துக்கு சென்றுவர சிறப்பு போக்கு வரத்து வசதிகள் செய்யப்பட் டுள்ளன. தேர்வுப் பணியில் ஈடு படும் ஆசிரியர்களுக்கு கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment