தோல்வி அடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக 27-ந்தேதி நடைபெற உள்ள மறுதேர்வை தள்ளிவைக்கவேண்டும் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2019-20-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 வகுப்புக்கான புதியபாடத்திட்டம் அறிமுகம், தேர்வுநேரத்தில் கொரோனா அச்சுறுத்தல் ஆகியவைகளை எதிர்கொண்டு அரசாங்கத்தின் சரியான நெறிமுறைகளோடு, ஆசிரியர்கள் எடுத்துகொண்ட தனிகவனம், குறிப்பாக மாணவர்களின் ஈடுபாடோடு 85.94 சதவீதம் அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 1.40 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்கனவே கடைசித்தேர்வு எழுதாமல் போன மாணவர்களுக்கு மறுவாய்ப்பாக வரும் 27-ந்தேதி தேர்வு நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதை வரவேற்பதோடு, அத்தேர்வோடு தற்போது தோல்வியடைந்த மாணவர்களுக்கு உடனடி தேர்வுகளை சேர்த்துவைக்கவும் விண்ணப்பிக்க வசதியாக 27-ந்தேதி நடைபெறும் தேர்வினை இரண்டு வாரங்கள் தள்ளிவைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment