ஏற்கனவே எழுதாத பிளஸ்-2 மாணவர்களுக்கு 27-ந் தேதி மீண்டும் தேர்வு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்து உள்ளன. தேர்வு முடிவுகள் வெளி வந்ததால், ஏற்கனவே தேர்வு எழுத முடியாமல் இருந்த மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 27-ந் தேதி தேர்வு நடைபெறும். மொத்தமாக தேர்வு எழுதாத மாணவர்கள் என்று பார்த்தால் 34 ஆயிரத்து 842 பேர் உள்ளனர். மொத்தம் உள்ள 6 தேர்வுகளில் ஒரே ஒரு தேர்வு மட்டும் எழுதியவர்களும் இதில் உள்ளனர். அவர்களும் இந்த புதிய அட்டவணைப்படி தங்கள் தேர்வுகளை எழுதலாம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசும், பள்ளிக்கல்வித்துறையும் செய்து இருக்கிறது. இவர்களுக்கு தேவையான தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்படும். 6 தேர்வுகளும் எழுதும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உடனடியாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்த நடவடிக்கையானது அனைத்து மாணவ-மாணவிகள், பெற்றோர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

No comments:

Post a Comment