அமைச்சர் செங்கோட்டையனுடன் தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை

திமுக இளைஞரணி, மாணவரணியின் மாவட்ட அமைப்பாளர் கள் கூட்டம் கடந்த 18-ம் தேதி காணொலி காட்சி மூலம் நடந்தது. அப்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார். இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான மனுவை அமைச்சரிடம் அளித்தார். அப்போது, திமுக எம்எல்ஏக் கள் எழிலரசன், தாயகம் கவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் உதயநிதி கூறியதாவது:

கரோனா தொற்று நிலை சீரடையும்வரை 10-ம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். கேரளாவில் தேர்வு அறிவிக் கப்பட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். அங்கு கரோனா தொற்று குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிகம் உள்ளது என்றோம். இதை அமைச்சரும் ஒப்புக்கொண்டார். இன்னும் 2,3 நாட்களில் இது தொடர்பாக நல்ல முடிவை அறிவிப்போம் என்றார்.

கல்வி முக்கியம்தான்; அதே நேரம் மாணவர்கள் உயிரும் முக்கியம். அதனால்தான், இயல்புநிலை வந்ததும் தேர்வை நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment