சென்னை தவிர பிற பகுதிகளில் இன்று முதல் ஆட்டோ, சைக்கிள் ரிக் ஷாக்கள் இயங்க அனுமதி

சென்னை மாநகர காவல் எல்லை மற்றும் நோய் கட்டுப்பாடு பகுதி களைத் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் இன்று முதல் ஆட்டோக்கள், சைக்கிள் ரிக் ஷாக் கள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் தொற்றின் தன்மையை கருத்தில்கொண்டு சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் பல்வேறு தளர்வுகளையும் அரசு அறிவித்து வருகிறது.

அதன்படி, சென்னை மாநகர காவல் எல்லை பகுதிகளைத் தவிர தமிழகம் முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக் ஷா ஆகிய வாகனங்கள் இன்று முதல் (23-ம் தேதி) இயங்க அனுமதிக்கப்படுகிறது. ஓட்டுநர் மற்றும் ஒரு பயணியுடன் காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை மட்டும் இந்த வாகனங் கள் இயக்க அனுமதிக்கப் படுகிறது.

நோய்க் கட்டுப்பாட்டு பகுதி களில் ஆட்டோ, சைக்கிள் ரிக் ஷா ஆகியவற்றை இயக்க அனுமதி யில்லை. அப்பகுதிகளில் வாழும் ஆட்டோ, ரிக் ஷா ஓட்டுநர்களும் இவ்வாகனங்களை ஓட்ட அனுமதி யில்லை.

முகக்கவசம் அவசியம்

பயணிகள் பயன்படுத்தும் வகை யில் வாகனங்களில் கைகழுவும் திரவத்தை (சானிடைசர்) ஓட்டு நர்கள் வைத்திருக்க வேண் டும். ஓட்டுநர்களும் பயணிகளும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந் திருக்க வேண்டும். ஆட்டோ, சைக்கிள் ரிக் ஷா ஆகியவற்றை தினமும் 3 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவுவதுடன் வாக னத்தில் சுகாதாரத்தையும் பேண வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment