கரோனா தடுப்பு மருந்தின் முதல்கட்ட சோதனை வெற்றி இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும்

அமெரிக்காவில் கரோனா வைரஸ் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு வழங்கி நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது. அடுத்த 2 கட்ட சோதனைகளும் வெற்றி அடைந்தால் இந்த ஆண்டு இறுதியில் கரோனா தடுப்பு மருந்து விற்பனைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா வைரஸ் காய்ச்சலுக்கு புதிய மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலகின் பல்வேறு மருந்து நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனம் கடந்த ஜனவரியில் 'எம்ஆர்என்ஏ-1273' என்ற மருந்தை கண்டுபிடித்தது. இந்த மருந்து முதலில் விலங்கு களுக்கு அளித்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் முழு வெற்றி கிடைத்தது.

இதைத் தொடர்ந்து இந்த மருந்து, அமெரிக்க அரசின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் தடுப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாடர்னா நிறு வனமும் அமெரிக்க அரசு நிறுவன மும் இணைந்து மனிதர்களிடம் ஆராய்ச்சியை தொடங்கின.

இதற்காக 45 பேர் தேர்வு செய்யப் பட்டனர். அவர்கள் பல்வேறு அணி களாக பிரிக்கப்பட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் முதல் அணியை சேர்ந்த 8 பேரின் ஆய்வு முடிவுகள் முழுமையாக கிடைத் துள்ளன. அவர்கள் 8 பேரின் உட லிலும் கரோனா வைரஸை அழிக் கும் எதிரணுக்கள் உருவாகி உள்ளன.

இதுகுறித்து மாடர்னா நிறுவனத் தின் தலைமை மருத்துவ அதிகாரி டால் ஜாக்ஸ் கூறியதாவது:

மனிதர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது. வெகுவிரைவில் 2-ம் கட்ட பரிசோதனையை தொடங்க உள்ளோம். இதற்காக 600 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து 3-ம் கட்ட சோதனை வரும் ஜூலையில் தொடங்கப்படும். இதற்காக ஆயிரக் கணக்கானோர் தேர்வு செய்யப் படுவார்கள். அனைத்து சோதனை களும் வெற்றி பெற்றால் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் எங்களது 'எம்ஆர்என்ஏ-1273' மருந்து சந்தை யில் விற்பனைக்கு கிடைக்கும்.

எங்களது மருந்தில் சில பக்க விளைவுகள் ஏற்பட்டன. அதாவது நோயாளிகளின் உடலில் ஊசி மருந்து செலுத்தப்பட்ட பகுதி சிவந்து காணப்படுகிறது. சிறிது வலியும் இருந்தது. அதிக அளவு மருந்து வழங்கப்பட்ட 3 நோயாளி களுக்கு முதலில் தலைவலி, உடல்வலி இருந்தது. எனினும் அடுத்த நாளே அவர்களுக்கு தலை வலி, உடல்வலி குணமாகிவிட்டது. இந்த பக்கவிளைவுகளை குறைக்க ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மனிதர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றிருப்பதால் மாடர்னா நிறு வனத்தின் பங்குகளின் மதிப்பு 39 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 'எம்ஆர்என்ஏ-1273' மருந்தை அதிக அளவில் தயாரிக்க சுவிட் சர்லாந்தை சேர்ந்த லோன்சா நிறு வனத்துடன் மாடர்னா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் ஐரோப்பா உட்பட உலகம் முழுவதும் மருந்தை சந்தைப் படுத்த மாடர்னா திட்ட மிட்டுள்ளது.

No comments:

Post a Comment