மேற்குவங்கத்தில் கரையை கடந்தது ‘உம்பன்’ புயல்

மேற்குவங்கத்தில் நேற்று மாலை ‘உம்பன்’ புயல் ஆக்ரோஷமாக கரையைக் கடந் தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. பல ஆயிரக்கணக்கான மரங் கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.

முன்னெச்சரிக்கையாக சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப் பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.

வங்கக் கடலில் உருவான ‘உம்பன்’ புயல், அதிதீவிர புயலாக மாறி ஒடிசா, மேற்குவங்கத்தை நோக்கி நகர்ந்தது. மேற்குவங்கம் வங்கதேசம் இடையே 20-ம் தேதி (நேற்று) மாலை புயல் கரையைக் கடக்கும், இதன்காரணமாக மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங் களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, இந்த மாநிலங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒடிசாவில் சுமார் 1.5 லட்சம் பேரும் மேற்குவங்கத்தில் 5 லட்சம் பேரும் பாதுகாப்பான இடங் களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

புயல் காரணமாக ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. ஒடிசாவை விட்டு விலகிச் சென்ற உம்பன் புயல், மேற்குவங்கத்தின் திஹா, கத்தியா இடையே நேற்று மாலை கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 160 கி.மீ. முதல் 175 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.

மாலை 3 மணிக்கு கரையைத் தொட்ட புயல், இரவு வரை ஆக்ரோஷமாக கரையைக் கடந்தது. இதன்காரணமாக மேற்குவங்கத்தின் வடக்கு, தெற்கு 24 பர்கானஸ், கிழக்கு மிதினாபூர் உட்பட 7 மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அண்டை நாடான வங்கதேசத்திலும் பலத்த மழை பெய்தது. அந்த நாட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

மேற்குவங்கத்தில் புயலால் மரம் சரிந்து பசீர்ஹட் பகுதியில் 20 வயது இளைஞர், ஹவுராவில் 13 வயது சிறுமி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். பல இடங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. தலைநகர் கொல்கத்தா உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மின் விநியோகம் தடைபட்டது. கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டது.

வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் 5,200-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இவற்றையும் சேர்த்து மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. இரவு நேரம் என்பதால் புயல் சேதத்தை மதிப்பிட முடியவில்லை. அடுத்த சில நாட் களில் முழுமையான விவரம் கிடைக் கும் என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தா வானிலை மைய மூத்த அதிகாரி கூறும்போது, ‘‘திஹா, கத்தியா இடையே உம்பன் புயல் கரையைக் கடந்தபோது அதிகபட்சமாக மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. அதன்பிறகு புயலின் வேகம் குறைந்தது. ஹவுரா, கொல்கத்தாவை புயல் கடந்தபோது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது’’ என்று தெரிவித்தார்.

தேசிய பேரிடர் மீட்புப் படை தலைவர் எஸ்.என்.பிரதான் கூறும்போது, ‘‘சுமார் 5 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியுள்ளோம். தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 41 குழுக்கள் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியையும் பின்பற்றி வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.

கொல்கத்தாவில் புயல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் இரவு இந்த மையத்திலேயே தூங்கினார். அவர் நேற்று கட்டுப்பாட்டு அறையில் முகாமிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார். கொல்கத்தாவில் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பலத்த மழையால் கொல்கத்தா நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலை, தெருக்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அவற்றை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

மேற்குவங்கத்தின் வடக்கு பகுதி யில் இன்றும் மழை தொடரும் என்று கொல்கத்தா வானிலை மையம் தெரிவித் துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பு கொள்வதற்காக அரசு தரப்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேற்குவங்கத்தை சூறையாடிய உம்பன் புயல், இன்று அசாம், மேகால யாவை கடந்து செல்லும். அப்போது புயலின் வேகம் குறைந்திருக்கும். எனினும் வடகிழக்கு மாநிலங்கள் முழு வதும் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித் துள்ளது.

அசாம் மாநில தலைமைச் செயலாளர் குமார் சஞ்சய் கிருஷ்ணா நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘மே 21-ம் தேதி உம்பன் புயல் அசாமில் கரையைக் கடக்கும். குறிப்பாக மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட் சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகள், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.4 பேர் உயிரிழப்பு 10 ஆயிரம் வீடுகள் இடிந்தன

No comments:

Post a Comment