டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு

முதுநிலைப் பொறியியல், எம்பிஏ, எம்சிஏ சேர்க் கைக்கான 'டான்செட்' தேர்வு முடிவுகள் இணையதளத்தில் செவ் வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகள், கலை அறிவியல் கல்லுாரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்பிஏ, எம்சிஏ, எம் ஆர்க் போன்ற முதுநிலை படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

அதன்படி, 2020-ஆம் ஆண்டுக்கானடான்செட் தேர்வு கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி நடந்தது. எம்சிஏ, எம்பிஏ படிப்புக ளுக்கு பிப்ரவரி 29-ஆம் தேதியும், எம்இ, எம் ஆர்க் மற்றும் எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 1-ஆம் தேதியும் தேர்வு நடந்தது. இந்த தேர்வை , 33 ஆயிரத்து 416 மாணவர்கள் எழுதினர். இந்நிலையில், டான்செட் தேர்வுகளுக்கான முடிவுகள் செவ் வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. டான்செட் தேர்வு முடிவு களை tancet.annauniv.edu/cet20/ என்ற தளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். வரும் 23-ஆம் தேதிக்குள் மாணவர் கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment