கூடுதல் பேருந்துகள் இயக்க அரசு ஊழியர்கள் கோரிக்கை

ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர் களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண் டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு ஊழியர்கள் சிலர் கூறும்போது, “அரசு ஊழியர்களுக்கு போதிய அளவில் பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் சென்னை தலைமை செயலக ஊழியர்களுக்குத்தான் அதிக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற துறை ஊழியர்களுக்கு போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை” என்றனர்.

இதற்கிடையே தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி, போக்கு வரத்துத் துறை செயலருக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில், ‘‘பல்வேறு இடங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நாங்களாகவே பேருந்துகளை இயக்க முடியாது. அந்தந்த அரசு துறை சார்பில் எங்களுக்கு கோரிக்கை வரும் போது, அரசின் அனுமதி பெற்று கூடுதல் பேருந்து களை இயக்க தயாராக உள்ளோம்’’ என்றனர்.

No comments:

Post a Comment