அத்தியாவசியமற்ற பொருட்களையும் அமேசான் நிறுவனம் வரவேற்பு

கரோனா வைரஸ் பாதிப்பு அதிக மில்லாத பகுதிகளில் பொருளா தார நடவடிக்கைகளுக்காக அத்தியாவசிய பொருட்களின் விற் பனை மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அமேசான், பிளிப்கார்ட் போன்றவை முற்றிலு மாக தங்கள் சேவையை ஊரடங் கால் நிறுத்தி வைத்திருந்தன.

மூன்றாம் கட்ட ஊரடங்கின் போது தொற்று குறைவாக உள்ள பச்சை மற்றும் ஆரஞ்சு பகுதிகளில் அத்தியாவசியமற்ற பொருட்களை டெலிவரி செய்ய அனுமதிக்கப் பட்டது. தற்போது கன்டெயின் மென்ட் பகுதிகள் என்று சொல் லப்படும் தொற்று அதிகம் உள்ள பகுதிகளைத் தவிர பிற இடங்களில் பொருட்களைத் தேவையான பாதுகாப்பு நடைமுறைகளுடன் டெலிவரி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து அமேசான் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘ஆறு லட்சம் சிறு வர்த்தகர்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தங்களது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர அரசின் இந்த முடிவு உதவியாக இருக்கும். அரசு வகுத்துள்ள பாது காப்பு ஏற்பாடுகளுடன் அமேசான் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங் கள் செயல்படும். இதன்மூலம் மக்களின் தேவை பூர்த்தியாவ தோடு, வேலைவாய்ப்பு விஷயத் திலும் கணிசமான பாதிப்பு தடுக் கப்படும்” என்று கூறினார்.

No comments:

Post a Comment