வங்கிக் கடன் தவணை செலுத்த ரிசர்வ் வங்கி பரிசீலனை

நாடு முழுவதும் 4-வது கட்டமாக மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், வங்கிக் கடன் தவணை செலுத்துவதற்கு மேலும் 3 மாத கால அவகாசம் அளிக்கப்படலாம் என தெரிகிறது.

கடந்த மார்ச் மாதம் முதல் முறையாக ஊரடங்கு அறிவித்த பின்னர், தனி நபர் மற்றும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடனுக்கு 3 மாத அவகாசம் அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த மூன்று மாத கால அவகாசத்தை பயன்படுத்துவதால் சிபில் மதிப்பெண் பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவிக்கப் பட்டது. மார்ச் 1 முதல் மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்ட சலுகை மே 31-ம் தேதியுடன் முடிகிறது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி கடன் தவணை செலுத்த வேண்டிய கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கக் கூடும் என்று எஸ்பிஐ வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மேலும் 3 மாதங்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

பொதுவாக வங்கிக் கடனை தொடர்ந்து 3 மாதங்கள் செலுத்தாமல் இருந்தால் அது வாராக் கடனாகக் கருதப்படும். அடுத்த கட்டமாக திவால் நடைமுறை நடவடிக்கை எடுக்க வழி ஏற்படும். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி 3 மாதம் சலுகை அளித்தது. இது மேலும் 3 மாதம் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment