நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஹோமியோபதி மருந்து - தமிழக அரசு தகவல்

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  'ஆர்சனிகம் ஆல்பம் 30' என்ற ஹோமியோ பதி மருந்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹோமியோபதி மருத்துவரான பூவேந்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரோனாநோய்த்தொற்றுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், ஹோமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30' என்ற மருந்தை பயன்படுத்த ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. ஆர்சனிகம் ஆல்பம் 30 ஹோமியோபதி மருந்தை பொதுமக்களுக்கும், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இலவசமாக வழங்க தமி ழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் ஜெயபிரகாஷ் நாராயணன், இந்த மருந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிப திகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment