அமேசான் நிறுவனத்தில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள்

அமேசான் நிறுவனம் உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவன மாக உள்ளது. தற்போது அதன் ஃபுல்ஃபில்மென்ட் மற்றும் டெலிவரி உள்ளிட்ட பிரிவு களில் பணிபுரிய ஆட்கள் அதி கம் தேவையாக உள்ளனர். ஏறக்குறைய 50 ஆயிரம் பேர் தேவையாக இருப்பதாக அமேசான் தெரிவித்துள்ளது.

மேலும் அமேசான் ஃப்ளெக்ஸ் என்ற திட்டத்தின் மூலம், பகுதி நேரமாகவும் பணி புரியும் வகையில் வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்ட மிட்டுள்ளது. இந்த அமேசான் ஃப்ளெக்ஸில் இணைந்து கொண்டால் அவரவர் விருப்ப பணி நேரத்தை அவரவரே தேர்ந்தெடுக்கலாம்.

கரோனா வைரஸ் பயத்தால் மக்கள் வெளியில் வர தயங்கு கின்றனர். மேலும் மால்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலை யில் ஆன்லைன் வர்த்தக சேவையின் தேவை அதிகரித் துள்ளது. எனவே, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ள ஆன்லைன் வர்த்தக சேவைகள் காலத்தின் கட்டாயம். தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங் களுடன் அமேசான் இந்தச் சேவையைச் செய்யும் என்று அதன் ஃபுல்ஃபில்மென்ட் பிரிவின் துணைத் தலைவர் அகில் சக்சேனா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment