மத்திய அரசு அறிவித்த 3 மாத பிஎப் சலுகை அமல்

சம்பளம் கூடுதலாககைக்கு வரும் கொரோனா பாதிப்பால், அடுத்த 3 மாதங்களுக்கு பிஎப் பங்களிப்பு 10 சத வீதமாக குறைக்கும் சலுகை முறைப்படி நேற்று அமல்ப டுத்தப்பட்டது. இதன் மூலம், அடுத்த 3 மாதத்திற்கு சம்பள பணம் கூடுதலாக கைக்கு கிடைக்கும். - கொரோனாவால் பாதிக் கப்பட்ட பொருளாதாரத்தை ஊக்குவிக்க ரூ.20 லட்சம் கோடி நிதிச் சலுகையை மத் திய அரசு அறிவித்தது.

இதில், தொழிலாளர்கள் மத்தியில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, அடுத்த 3 மாதத்திற்கு தொழி லாளர் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் பிஎப் பங்களிப்பை 10 சதவீதமாக குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். வருங்கால வைப்பு நிதியில் (பிஎப்) மாதந்தோறும் தொழி லாளர்கள் சம்பளத்தில் 12 சதவீதத்தையும், அதே அளவுக்கு உரிமையாளர்கள் 12 சதவீதத் தையும் செலுத்தி வருகின்றனர்.

இது அடுத்த 3 மாதத்திற்கு 10 சத வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசா ணையை மத்திய பணியாளர் நலத்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், 'மே, ஜூன், ஜூலை மாதத்திற்கான பிஎப் தொகை குறைக்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் தொழிலா ளர்கள் கைக்கு கூடுதலாக சம் பள பணம் கிடைக்கும். இந்த எஞ்சிய தொகையை மத்திய அரசு செலுத்த ரூ.6,750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், 4.3 கோடி தொழிலாளர்களும், 6.5 லட்சம் நிறுவன உரிமையாளர்களும் பயனடைவர். இது பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு பொருந்தாது. மேலும், பிஎம் கரீப் கல்யாண் மற்றும் அதன் நீட்டிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் 24 சதவீத பிஎப் பங்களிப்பையும் மத்திய அரசே செலுத்தக்கூடிய ஊழியர்களுக்கும் பொருந்தாது. அதிகபட்சம் 100 ஊழியர்களும், அதில் 90 சத வீதம் பேர் ரூ.15,000க்கும் குறை வான சம்பளம் பெறும் நிறுவ னங்களுக்கு கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் ஊழியர்கள், உரிமையாளர்கள் இருவரின் பிஎப் பங்களிப்பையும் மத்திய அரசே 6 மாதத்திற்கு செலுத்த சிறப்பு சலுகை வழங்கப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment