ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கு மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

ஜேஇஇமுதல்நிலைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே மாதம் 24-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படு வதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நிகழாண்டு ஏப்ரலில் நடைபெறவிருந்த ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, கரோனாபாதிப்பு காரணமாக ஜூலை 3-ஆவது வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பு: மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜேஇஇ முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு தரப்படுகிறது. இதுவரை விண்ணப்பிக்காத அல்லது விண் ணப்பங்களை முறையாக பதிவேற்றம் செய்யாத மாணவர்கள் வரும் மே 24-ஆம் தேதிக்குள் https://nta.ac.in/ என்ற இணையதளம் வழி யாக விண்ணப்பிக்கலாம். இது இறுதிவாய்ப்பு என்பதால் மாணவர் கள் கவனமுடன் செயல்பட வேண்டும். தினமும் மாலை 5 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வுக் கட்டணத்தை இரவு 11.50 மணி வரை செலுத்தலாம். அதே போல், விண்ண ப்பங்களில் மே 25 முதல் 31-ஆம் தேதிக்குள் தேர்வு மையம் உள்பட விவரங்களை மாற்றிக் கொள்ளலாம். இதில் ஏதே னும் சந்தேகங்கள் இருந்தால் 8287471852,8178359845, 9650173668, 9599676953, 8882356803 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment