ஒத்திவைக்கப்பட்ட சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ஜூலை 1-ந்தேதி தொடங்குகிறது மாணவர்கள் முககவசம் அணிந்து வர உத்தரவு

ஒத்திவைக்கப்பட்ட சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூலை மாதம் 1-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் முக கவசம் அணிந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. அந்த தேர்வுகள் எப்போது நடைபெறும்? என்று மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், ஜூலை 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்தது. அதற்கான தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் நேற்று வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு டெல்லி மாநிலத்தில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1-ந்தேதி சமூக அறிவியல், 2-ந்தேதி அறிவியல், 10-ந்தேதி இந்தி படிப்புகள், 15-ந்தேதி ஆங்கில தொடர்பு தேர்வும் நடைபெற உள்ளது.நாடு முழுவதும் மற்றும் வடகிழக்கு டெல்லி மாநிலம் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1-ந்தேதி மனை அறிவியல், 2-ந்தேதி இந்தி, 3-ந்தேதி இயற்பியல்(வடகிழக்கு டெல்லி), 4-ந்தேதி கணக்கு பதிவியல் (வடகிழக்கு டெல்லி), 6-ந்தேதி வேதியியல் (வடகிழக்கு டெல்லி), 7-ந்தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல்தொழில்நுட்பம், 8-ந்தேதி ஆங்கிலம் தொடர்பு(வடகிழக்கு டெல்லி), 9-ந்தேதி வணிக படிப்புகள், 10-ந்தேதி உயிரி தொழில்நுட்பவியல், 11-ந்தேதி புவியியல் தேர்வு நடைபெற இருக்கிறது.

13-ந்தேதி சமூகவியல், 14-ந்தேதி மனை அறிவியல்(வடகிழக்கு டெல்லி), 15-ந்தேதி கணிதம்(வடகிழக்கு டெல்லி), பொருளியல்(வடகிழக்கு டெல்லி), வரலாறு(வடகிழக்கு டெல்லி), உயிரியல்(வடகிழக்கு டெல்லி) தேர்வும் நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வும் காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு நிறைவுபெறும்.

தேர்வு எழுதும் மாணவர்கள் கிருமிநாசினி திரவத்தை வெளிப்படையான பாட்டிலில் கொண்டு வரலாம். முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஹால்டிக்கெட்டுகளில் கொடுக்கப்பட்டு இருக்கும் விதிமுறைகளை தவறாமல் தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment