சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு புதிய அட்டவணை வெளியீடு

நாடு முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வும் ஜூலை 1-ம் தேதி முதல் நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டுத் துறை வெளியிட்ட புதிய அட்டவணையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு, ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது. 12-ம் வகுப்பில் உள்ள பல்வேறு துறைகளுக்கான தேர்வுகள் 13-ம் தேதியுடன் முடிவடைகின்றன.

அதேபோல, வடகிழக்கு டெல்லியில் ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூலை 3-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும். தேர்வு எழுத வரும் மாணவர்கள் சானிடைசர் குப்பியுடன் வர வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். இவற்றை தேர்வு மைய அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

மேலும், தேர்வு நுழைவுச் சீட்டில் உள்ள அனைத்து விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதேபோல, நோய்த்தொற்று அல்லது நோய் அறிகுறி உள்ள மாணவர்களை, தேர்வு எழுத பெற்றோர் அனுமதிக்க வேண்டாம்.

No comments:

Post a Comment