பல்வேறு நிபந்தனைகளுடன் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

பல்வேறு நிபந்தனைகளுடன் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்திக் கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள் துறை செயலர் அஜஸ் பல்லா அனைத்து மாநிலங்களின் தலை மைச் செயலர்களுக்கும் அனுப்பி யுள்ள கடிதம்:

ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட் டுள்ளன. இதனால், மாநில கல்வி வாரியங்கள் மற்றும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ வாரியங்களால் நடத்தப்படும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்காலிகமாக நிறுத்திவைக் கப்பட்டுள்ளன.

பொதுத்தேர்வுகளை நடத்த அனுமதி கோரி மாநில அரசுகளி டம் இருந்து கோரிக்கைகள் வந் துள்ளன. மாணவர்களின் படிப்பு நலனை கருத்தில்கொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. அதேநேரம் பொதுத் தேர்வுகளை நடத்தும்போது பின் வரும் நிபந்தனைகள் பின்பற்றப் பட வேண்டும்.

கரோனா கட்டுப்பாட்டுப் பகுதி களில் தேர்வு மையம் அமைக்கப் படக் கூடாது. மாணவர்கள், ஆசிரி யர்கள், தேர்வு பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்கள் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தேர்வு மையங்களில் கிருமிநாசினி வைக்கப்பட்டிருக்க வேண்டும். தேர்வறையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி செய்து தரவேண்டும். இவ்வாறு கடிதத் தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment