வட்டி விகிதத்தை 0.4 சதவீதம் குறைத்தது ரிசர்வ் வங்கி கடன் தவணை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம் வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.4 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் வீடு, வாகனக் கடன் வட்டி குறையும். வங்கிக் கடன் தவணையை செலுத்துவதற்கு மேலும் 3 மாத அவகாசம் வழங்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த விதிமுறை பொருந்தும்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 4 கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு இம்மாதம் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது ரிசர்வ் வங்கி சார்பில் வட்டி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. வீடு, கார், தனிநபர் வங்கிக் கடன்களுக்கான மார்ச், ஏப்ரல், மே மாத தவணை செலுத்துவதற்கு அவகாசம் நீட்டிக் கப்பட்டது. தற்போது மே இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப் பதால் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை மேலும் 3 மாதங்களுக்கு கடன் தவணை செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர் களிடம் நேற்று காணொலி காட்சி மூலம் பேசிய ரிசர்வ் வங்கி கவர் னர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது:

ஊரடங்கால் நாட்டின் பொரு ளாதாரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மக்களின் வாழ் வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வாங்கியுள்ள வங்கிக் கடன் சுமையை மேலும் குறைக்கும் வகையில் வட்டிவிகிதம் 0.4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. இதன் படி, கடனுக்கான வட்டி 4.40 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

இதேபோல ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.75 சதவீதத்தில் இருந்து 3.35 சதவீதமாக குறைக்கப் படுகிறது. இதன்படி, ரிசர்வ் வங்கி யிடம் இருந்து வங்கிகள் பெரும் கடனுக்கான வட்டி 4 சதவீதமாகவும் வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 3.35 சதவீதமாகவும் இருக்கும்.

வட்டிக் குறைப்பின் பலன் பொது மக்களுக்கு சென்று சேர வேண்டும் என ஆர்பிஐ விரும்புகிறது. வட்டி குறைப்பு நடவடிக்கையால் வங்கி கள் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனி நபர் கடனுக்கான வட்டி விகி தத்தை குறைக்க வாய்ப்புகள் உள் ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு 2 மாதங்களில் இரண்டாவது முறையாக வட்டிக் குறைப்பு அறிவி ப்பை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் ஜூன் மாதம் நடைபெற வேண்டும். ஆனால், அதற்கு முன்பாகவே வட்டிக் குறைப்பு அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வட்டிக் குறைப்பு நடவடிக்கைக்கு குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர் களும் ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ளனர். இதனால் வட்டிக் குறைப்பு முடிவு ஏகமனதாக நிறைவேறியுள்ளது.

நிறுவனங்களின் மூலதன கட னுக்கும் கால அவகாசம் 3 மாதம் நீட்டிக்கப்படுகிறது. 6 மாதங்களுக்கு சேர்ந்துள்ள வட்டித் தொகை டேர்ம் லோன் ஆக கணக்கிடப்படும்.

கரோனா பாதிப்பைக் கட்டுப் படுத்த மேற்கொள்ளப்பட்ட ஊர டங்கு காரணமாக நடப்பு நிதி ஆண்டில் (2020-21) நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் நிலைக்குச் செல்லும் என்று ஆர்பிஐ கணித்துள்ளது.

தற்போது அமலில் உள்ள ஊரடங்கின் பாதிப்பு நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதி வரை இருக்கும். இதனால் பிற்பாதியில் நாட்டின் பணவீக்க விகிதம் ஸ்திரமாகவும் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் 4 சதவீத அளவுக்கு இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

உணவு பணவீக்க விகிதம் கணிக்க முடியாத அளவுக்கு இருக் கக் கூடும். ஏனெனில், பருப்பு வகை களின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பணவீக்க விகி தத்தை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணிக்கும். தேவைப்படும் பட்சத்தில் உறுதியான நடவடிக்கை களை எடுக்க ஆர்பிஐ தயங்காது.

இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment