டிஎன்பிஎஸ்சி தலைவராக பாலசந்திரன் நியமனம்

டிஎன்பிஎஸ்சியின் புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி கா.பாலசந்திரன் நேற்று நியமிக்கப்பட்டு உடனடியாக பொறுப்பேற்றார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலை வராக இருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அருள்மொழியின் பதவிக் காலம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந் தது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சியின் புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி கா.பாலசந்திரன் நேற்று நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று மதியம் 12.30 மணியளவில் அவர் பொறுப்பேற்றார். அவருக்கு டிஎன்பிஎஸ்சி தலைவர் பொறுப்பை வகித்த வந்த மூத்த உறுப்பினர் ஏ.சுப்ரமணியன், டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார், தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி இரா.சுதன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

டிஎன்பிஎஸ்சி தலைவ ராக பொறுப்பேற்றுள்ள கா.பாலசந்திரன் தமிழக அர சின் வணிக வரி மற் றும் பதிவுத் துறை முதன்மைச் செயல ராக பணியாற்றி வந்தார். அவரது சொந்த ஊர் தஞ்சாவூர்.

டிஎன்பிஎஸ்சி தலைவருக்கான பதவிக் காலம் 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை ஆகும். தற்போது பாலசந்தி ரனுக்கு 60 வயது ஆகிறது. அந்த அடிப்படையில் அவர் 2 ஆண்டுகளுக்கு தலைவராக இருப்பார். டிஎன்பிஎஸ்சி-யில் மொத்தம் 13 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 3 உறுப்பினர் கள்தான் உள்ளனர். 10 உறுப் பினர் இடங்கள் காலியாக இருக்கின்றன.

எனவே, விரைவில் உறுப்பினர் பணி யிடங்களும் நிரப்பப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment