குறைந்தபட்ச இருப்புத் தொகை சேமிப்பு கணக்குக்கு அவசியமில்லை எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு

நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அதன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித் திருக்கிறது. இதுவரை குறைந்த பட்ச இருப்புத் தொகையை நிர் வகிக்காமல் இருந்தால் அபராதம் வசூலிக்கப்பட்டுவந்தது. தற்போது சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்த பட்ச இருப்பு நிர்வகிக்க வேண்டிய கட்டாயமில்லை என அறிவித்திருக்கிறது.

எஸ்பிஐ வங்கியில் மெட்ரோ நகரங்களில் ரூ.3,000, நகரங்களில் ரூ.2,000 மற்றும் கிராமப்புறங்களில் ரூ.1,000 எனும் அளவில் சராசரி குறைந்தபட்ச இருப்பு நிர்வகிக்கப் பட வேண்டும். அப்படி குறைந்த பட்ச இருப்புத் தொகை நிர்வகிக்கா விட்டால் ரூ.5 முதல் ரூ.15 வரை ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த அபராதம் என்பது பெரும்பாலானோருக்கு மிகுந்த நெருக்கடியாக இருந்துவந்தது. வருமானம் குறைவாக உள்ளவர் கள், அவசரத் தேவையாகப் பணம் எடுப்பவர்கள் இதனால் பல பிரச்சினைகளை எதிர்கொண்டனர். தங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்பை நிர்வகிப்பது என்பது எல்லோருக்கும் சாத்தியமில்லாத ஒன்று. இதனால் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை அபராதமாகப் பிடித்தம் செய்வது ஒருபக்கம், தேவையான சமயத்தில் பணத்தை எடுக்க முடியாத நிலை மறுபக்கம் என இந்த குறைந்தபட்ச இருப்புக் கான அபராதம் என்பது மக்களி டையே அதிருப்தியை ஏற்படுத்தி யது.

இந்நிலையில் தற்போது எஸ்பிஐ வங்கி சேமிப்பு கணக்கு களுக்கு குறைந்தபட்ச இருப்பை நிர்வகிக்காவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்து அறிவித் திருக்கிறது. குறைந்தபட்ச இருப்பை நிர்வகிக்க வேண்டிய கட் டாயமில்லை என்று கூறியுள்ளது.

வங்கித் துறையில் எஸ்பிஐ எடுக் கும் முடிவுகளைப் பெரும்பாலும் பிற வங்கிகளும் எடுத்துவந்துள் ளன. எஸ்பிஐ குறைந்தபட்ச இருப்பு தொடர்பாக அறிவித்துள்ள இந்த மகிழ்ச்சியான செய்தியை மற்ற வங்கிகளும் அறிவிக்கும் என்ற எதிர் பார்ப்பு மக்களிடையே எழுந் துள்ளது.

ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக வட்டிக் குறைப்பு நட வடிக்கையை எஸ்பிஐ எடுத்துள் ளது குறிப்பிடத்தக்கது. 10 புள்ளிகள் முதல் 50 புள்ளிகள் வரை வட்டிக் குறைப்பு மேற்கொள்ளப்பட் டுள்ளது. 7 நாள் முதல் 45 நாட்கள் வரையிலான சேமிப்புகளுக்கு முன்னர் 4 சதவீதம் அளிக்கப்பட்ட வட்டி தற்போது 4.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஓராண்டு மற்றும் அதற்கு மேலான காலத்தில் முதிர்வடையும் சேமிப்புகளுக்கு 10 புள்ளிகள் வரை வட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஓராண்டுக்கு மேல் 2 ஆண்டு வரையான சேமிப்பு களுக்கு 6 சதவீதமாக இருந்த வட்டி 5.90 சதவீதமாகக் குறைக்கப் பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்ட 6.50 சதவீத வட்டி 6.40 சதவீதமாகக் குறைக்கப் பட்டுள்ளது.

180 நாட்களுக்கு மேலாக வைக்கப்படும் அதிக அளவிலான டேர்ம் டெபாசிட்டுகளுக்கு (ரூ.2 கோடி மற்றும் அதற்குமேல்) 15 புள்ளிகள் வட்டி குறைக்கப்பட்டுள் ளது. அதேபோல ஓராண்டு மற்றும் அதற்கு மேலான காலத்துக்கான வட்டி 4.75 சதவீதத்திலிருந்து 4.60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் வங்கி 10 புள்ளிகள் முதல் 50 புள்ளிகள் வரை வட்டி குறைப்பு செய்தது. எம்சிஎல்ஆர் மீதான வட்டியும் 15 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. வட்டி குறைப்பு மார்ச் 10-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என வங்கி தெரிவித்துள்ளது.வங்கித் துறையில் எஸ்பிஐ எடுக்கும் முடிவுகளைப் பெரும்பாலும் பிற வங்கிகளும் எடுத்துவந்துள்ளன. எஸ்பிஐ குறைந்தபட்ச இருப்புதொடர்பாக அறிவித்துள்ள இந்த மகிழ்ச்சியான செய்தியை மற்ற வங்கிகளும் அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

No comments:

Post a Comment