பள்ளிகளில் பயோ-மெட்ரிக் பதிவு நிறுத்திவைப்பு

‘கோவிட் - 19’ வைரஸ் பாதிப்பை கருத்தில்கொண்டு பாதுகாப்பு நட வடிக்கையாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு மார்ச் 31-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப் பன் நேற்று அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில் கூறியிருப்பதாவது:

‘கோவிட் - 19’ (கரோனா) வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடந்து வரு கின்றன. இந்நிலையில் பாது காப்பு முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிக ளிலும் மார்ச் 31-ம் தேதி வரை, ஆதார் எண் இணைந்த பயோ- மெட்ரிக் வருகைப்பதிவு முறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப் படுகிறது.

இந்த காலகட்டத்தில் வரு கைப்பதிவேடு புத்தகத்தில் கையொப்பமிடுமாறு அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர் களுக்கு தலைமை ஆசிரியர்கள் மூலமாக அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மை கல்வி அதி காரிகளும், மாவட்ட கல்வி அதி காரிகளும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

No comments:

Post a Comment