தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுமா?

கொரோனா முன்னெச்சரிக்கையாக, தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுமா என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பீதி மக்களை பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது. முன்னெச்சரிக்கையாக, கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள், மால்கள் போன்றவற்றை மார்ச் 31 வரை மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அறிவித்தபடி பொதுத்தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு மையங்கள், விடைத்தாள் திருத்தும் இடங்களுக்கு ஆசிரியர்கள்கூட்டமாக வர வாய்ப்புள்ளதால் அனைத்து நிகழ்வுகளையும் ஒத்தி வைக்க வேண்டும். இதே போல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் ஒத்தி வைக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாணவர்கள் தேர்ச்சிபட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியது: பிற மாநிலங்களில் 8 ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அங்குள்ள அரசுகள் அறிவித்துள்ளன.தமிழகத்திலும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, அசாதாரண சூழ்நிலையை உணர்ந்து 9 ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்.தேர்வு நடக்கும் இடங்களில் மணவர்களை ஒரு மீட்டர் இடைவெளி விட்டு அமரச்செய்ய வேண்டும்.

தேர்வறைகளில் கைக்குட்டைகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அரசு டிஷ்யூ பேப்பர் வழங்க வேண்டும். மாணவர்கள் இல்லாத நிலையில், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து அடுத்த ஆண்டுக்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள அளித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, கூறினார்.

No comments:

Post a Comment