சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு முடிவு வெளியீடு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் காவல்துறையில் காலியாக உள்ள 969 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி பொது விண்ணப்பதாரர்களுக்கும், 13-ந் தேதி காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கும் நடந்தது. இதில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 243 பொது விண்ணப்பதாரர்களுக்கும், 17 ஆயிரத்து 447 காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கும் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.

எழுத்து தேர்வு முடிவுகள் அதாவது அடுத்த கட்ட தேர்வான உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு, உடற்திறன் போட்டி மற்றும் அசல் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு 1:5 என்ற விகிதத்தில் கலந்துகொள்ள தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பதிவு எண்களுடன் இனசுழற்சி அடிப்படையிலும் www.tnusr-b-o-n-l-i-ne.org என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இந்த போட்டிகளில் கலந்துகொள்வதற்கான அழைப்பு கடிதம் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் அந்த அழைப்பு கடிதத்தை உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு, உடற்திறன் போட்டி மற்றும் அசல் சான்றிதழ் சரிபார்த்தலில் கலந்துகொள்வதற்கு முன்னர் பதிவிறக்கம் செய்யலாம்.

மேற்கண்ட தகவல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment