மின்வாரிய பணிக்கான தேர்வு தமிழில் நடத்தப்படும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கணக்கீட்டாளர் மற்றும் இளநிலை உதவியாளர், கணக்கு பதவிகளுக்கான தேர்வு கணினி அடிப்படையிலான ஆங்கில மொழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களின் நலன் கருதி தமிழ் மொழியிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கணினி வழியில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வருகிற 23-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tan-g-e-d-co.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

இந்த தகவல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment