ஒருங்கிணைந்த பொறியியல் பணி: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பல்வேறு துறை பதவிகளுக்கான 733 காலி பணி இடங்களுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந் தேதியும், ஊட்டியில் 15-ந் தேதியும் தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் மொத்தம் 52 ஆயிரத்து 206 பேர் பங்கேற்றனர்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் வருகிற 23-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை சான்றிதழ்களை அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யவேண்டும். இதற்கிடையே சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 140 பேருடைய பதிவு எண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலை பணிகளில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான 72 பணி இடங்களுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி தேர்வு நடந்தது. இதில் 8 ஆயிரத்து 851 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் வருகிற 23-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை இ-சேவை மையங்கள் மூலமாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 145 பேர் கொண்ட பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் டி.என்.பிஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment