இணையதளம், செயலி மூலமாகவே பிரீமியம் செலுத்த எல்ஐசி வேண்டுகோள்

எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளதாவது:

கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், பாலிசி தாரர்கள் தங்களது பிரீமியம், கடன், கடனுக்கான வட்டியை செலுத்துவதில் சில பாது காப்பு வழிமுறைகளை கடைபிடிக் குமாறு எல்ஐசி நிர்வாகம் அறி வுறுத்துகிறது.

அதன்படி, பீம் யூபிஐ செயலி, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஈ-வாலட், இன்டர்நெட் பேங்கிங் ஆகியவை மூலமாக பணம் செலுத்த வேண்டும். கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் செலுத்தப் படும் தொகைக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது.

www.licindia.in என்ற இணைய தளம் மூலமாகவும், My LIC என்ற மொபைல் செயலி மூலமாகவும் பிரீமியத்தை செலுத்தலாம். இந்த வழிமுறைகளை பின்பற்றுவதால் எல்ஐசி அலுவலகத்துக்கு நேரில் வருவதை தவிர்க்கலாம்.

இதுகுறித்து கூடுதல் விவரங் களுக்கு 022-68276827 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment